படுகொலையான சார்லி கிர்க்.,இரங்கல் பதிவை லைக் செய்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளான பிரபலம்
அமெரிக்காவில் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அவரது பதிவு ஒன்றுக்கு லைக் செய்ததால் க்ளோய் கர்தாஷியன் ரசிகர்களால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
சார்லி கிர்க் படுகொலை
டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரியுமான சார்லி கிர்க் சுட்டுக்கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது இறப்பிற்கு பிரபலங்கள் பலருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பலர் இடுகைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ரியாலிட்டி பிரபலமான க்ளோய் கர்தாஷியன் (Khole Kardashian) சமூக வலைத்தளத்தில் சார்லி கிர்க்கின் இரங்கல் பதிவினை லைக் செய்து, கருத்து பதிவிட்டதற்காக விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
இரங்கல் பதிவு
ஏனென்றால் சார்லி கிர்க் கருக்கலைப்பு எதிர்ப்பு, குடியேற்ற எதிர்ப்பு, மூன்றாம் பாலினத்தவர் எதிர்ப்பு மற்றும் இரண்டாவது திருத்தத்திற்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து பேசி வந்தனர்.
ஆனால் கர்தாஷியனின் ரசிகர்கள் பலர் அதன் காரணமாக அவர் மீது எதிர்ப்பு மனநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில்தான், சார்லி கிர்க்கின் இரங்கல் பதிவு ஒன்றில் கிருத்துவம் குறித்து அவர் பேசிய வீடியோ பகிரப்பட்டிருந்தது.
அதனை லைக் செய்த க்ளோய் கர்தாஷியன், மூன்று பிரார்த்தனை செய்யும் கை எமோஜிகளையும் பதிவிட்டார்.
இதன் காரணமாகவே அவரது ரசிகர்களே கர்தாஷியனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் அவரோ இதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |