லண்டனில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகை குஷ்பு! அங்கிருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
லண்டனில் புதிய வீடு வாங்கிய நடிகை குஷ்பு.
அடிக்கடி லண்டனுக்கு செல்வதை வழக்கமாக அவர் கொண்டிருந்த நிலையில் தற்போது புதிய வீட்டில் இருந்து வெளியிட்ட புகைப்படம்.
நடிகை குஷ்பு லண்டனில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் குஷ்பு பாஜக கட்சியில் உள்ளார்.
இந்த நிலையில் குஷ்பு லண்டனில் புது வீடு வாங்கி உள்ளதாகவும், அங்கே பால் காய்ச்சி முதன் முதலாக போட்ட டீயை குடிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
My first cup of tea at new home, London. ❤️ pic.twitter.com/zzTfvIPPAO
— KhushbuSundar (@khushsundar) September 2, 2022
அடிக்கடி லண்டனுக்கு சென்று வந்த நடிகை குஷ்பு தற்போது அங்கேயே புதிதாக ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டாரா? என்றும் புது வீட்டுக்கு வாழ்த்துக்கள் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
லண்டனில் தனது மகள் படிப்புக்காக அங்கேயே ஒரு வீடு வாங்கி அவருடன் தங்கி பாதுகாத்து வருகிறாரா குஷ்பு என்றும் ரசிகர்கள் நடிகை குஷ்புவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.