Vote 4 INDIA சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த குஷ்பு! ஆவேசத்தில் மீண்டும் ஒரு பதிவு
நடிகை குஷ்பு வாக்களித்த பின்னர் பதிவிட்ட Vote 4 INDIA என்ற ஹேஸ்டேக் சர்ச்சையான நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.
குஷ்புவின் பதிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகையும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு தனது கணவர் மற்றும் மகள்களுடன் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
பின்னர், குஷ்பு தான் வாக்களித்த புகைப்படங்களை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து #Vote4INDIA மற்றும் #VoteFor400Paar என்று கூறியிருந்தார்.
இதில் உள்ள #Vote4INDIA என்ற ஹேஸ்டேக்கை கடந்த சில நாட்களாக இந்தியா கூட்டணியினர் பயன்படுத்தி வருவதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விளக்கமளித்த குஷ்பு
இந்நிலையில், Vote 4 INDIA என்ற ஹேஸ்டேக்குக்கு விளக்கம் அளித்து மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், "இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்பதை படித்தவர்களால், என் பயோவில் மோடி குறித்தும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாக்களியுங்கள் என்று இருந்ததை எப்படி வாசிக்க முடியாமல் போனது.
தோல்வியை பெற போகிறவர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்கள் என்று என்னால் சொல்ல முடியும். இது உங்களது பயத்தை காட்டுகிறது. பொறுத்திருந்து பாருங்கள், இந்த முறை மோடி தான் வருவார். பாஜகவிற்காக இந்தியா வாக்களிக்கும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |