அந்த 3 எழுத்து நடிகை நான் காரணம்:ரவி மோகன் குற்றச்சாட்டு: குஷ்புவின் வைரல் பதிவு
என்னுடைய குடும்பத்தை கெடுத்தது அந்த 3 எழுத்து நடிகை தான் என நடிகர் ரவி மோகன் கொந்தளித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன்
தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில் தமிழ் நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கண்ணீருடனும், கொந்தளித்தும் பேசிய நடிகர் ரவி மோகன், என்னால் ஒரே நாளில் விவாகரத்து செய்து இருக்க முடியும், ஆனால் என்னுடைய குழந்தைகளுக்காக அமைதி காத்தேன். எனக்கு கஷ்டம் ஏற்படும் போது எல்லாம் என்னுடன் இருந்தவர் கெனிஷா. ஆனால் தற்போது அவரை இங்கிருந்து அனுப்பி விட்டார்கள்.
என் மீது ஏற்கனவே பல கோடி கடன் வழக்குகள் நிலுவையில் உள்ளது, அப்போது கூட நான் சிரித்தப்படியே இருந்தேன். AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.
ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் என்னை பிளாக்மெயில் செய்து என்னை அடிமையாக வைத்து இருந்தனர்.
என் குடும்பம் இப்படி கெட்டுப் போனதற்கு அந்த 3 எழுத்து இட்லி நடிகை தான் காரணம். அவர் செய்வது எல்லாம் செய்துவிட்டு தற்போது பெண்ணியம் பேசுகிறார். இப்படி எல்லாம் எப்படி தான் நடிக்க முடிகிறது என்று தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Some are just hell bent to prove their DNA. Thank you for proving me right. 🙏😊
— KhushbuSundar (@khushsundar) May 16, 2026
நடிகை குஷ்பு கருத்து
இந்நிலையில் சிலர் தங்களுடைய DNA-வை நிரூபிப்பதில் தீவிரமாக உள்ளனர். நான் சொன்னவற்றை சரி என்று நிரூபித்ததற்காக நன்றி என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |