என் மகளும் பாதிக்கப்பட்டார்! ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி குறித்து குஷ்பு
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.
இசை நிகழ்ச்சி குளறுபடி
சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பார்க்கிங்கிற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர், நெரிசல் காரணமாக திரும்பிச் சென்றுள்ளனர். மேலும், சிலரால் கோல்ட் மற்றும் டைமண்ட் பாஸ் இருந்தும் உள்ளே செல்ல அனுமதியில்லை.
அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்த காரணத்தினால் தான், ரூ.1000 டிக்கெட் வாங்கியவர்கள், வேறொரு இருக்கைக்கு சென்ற சம்பவங்கள் நடைபெற்றது என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்திற்கு சினிமா பிரபலங்கள் சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பூ ஆதரவு
அந்தவகையில் நடிகை குஷ்பூ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,"சென்னை கச்சேரியில் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் எதிர்கொள்ளும் பெரும் குழப்பம் மற்றும் சிரமங்களைப் பற்றி கேள்விப்பட்டேன். ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்கிறார்.
டைமண்ட் பாஸ் இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டவர்களில் எனது மகளும் அவளுடைய நண்பர்களும் அடங்குவர். அவர்கள் அந்த இடத்தை அடைய 3 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
ஆனாலும், மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது. நேரலை நிகழ்ச்சிக்காக நிரம்பி வழியும் கூட்டத்தின் ஈர்ப்பை உணராத நிர்வாகத்தின் முழுமையான தோல்வி இது.
Heard about the major chaos and difficulties faced by #ARR fans at the chennai concert. Rahman has always made sure his fans are never disappointed. My daughter and her friends were among those who were denied entry despite a Diamond pass. It took them over 3 hours to reach the…
— KhushbuSundar (@khushsundar) September 12, 2023
ரஹ்மான் தனது இசை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் எப்போதும் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருக்குத் தகுதியான அனைத்தையும் தொடர்ந்து வழங்குவோம். அவருடன் நின்று, எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவோம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |