திடீரென தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலகுவதாக அறிவித்த குஷ்பூ
நடிகை குஷ்பூ உடல்நலக்குறைவு காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் பா.ஜ.க கட்சியின் ஆதரவாளரான நடிகை குஷ்பூவும், கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் குஷ்பூ திடீரென பிரச்சார பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன். நான் என்னை பா.ஜ.கவுக்காக அர்ப்பணித்துள்ளேன்.
மேலும் எங்கள் அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் பாதையை பின்பற்றி வருகிறோம். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டேன்.
ஆனால், மிகவும் துரதிர்ஷ்டவசமாக எனது வாலெலும்பு காயம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், அதற்கு உடனடி கவனம் தேவைப்படும். விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை, மேலும் பலவற்றை செய்ய மீண்டும் திரும்பி வருவேன்' என தெரிவித்துள்ளார்.
At times, hard decisions have to be taken and focus needs to be on one's health. I am at such a juncture today. I have dedicated myself to @BJP4India and have been following the path of our beloved PM @narendramodi ji, immersing myself in the election campaign activities. But… pic.twitter.com/tuevsqczok
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |