நடிகர் அஜித் குமாரின் விருது அறிவிப்புக்கு பின்னால் அரசியல் இருக்கிறதா? நடிகை குஷ்பு அளித்த விளக்கம்
நடிகர் அஜித் குமாருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு பின்னால் அரசியல் இருக்கிறதா என்கிற கேள்விக்கு நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
குஷ்பு விளக்கம்
இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. அதில் தமிழ் சினிமாவின் நடிகரான அஜித் குமாருக்கு கலைத்துறையில் அளித்த பங்களிப்பிற்காக பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இதனால், அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். மேலும், நடிகர் சங்கம், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அஜித் குமாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்று சில விமர்சனங்களை சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, சோபனா உள்ளிட்டோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடகாவில் ஆனந்த் நாக் சாருக்கும், ஆந்திராவில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறைகளில் உள்ளவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அரசியல் பார்க்காமல் நியாயமான முறையில் தெரிவு செய்துள்ளனர்" என்கிறார்.
பின்னர் அவரிடம் நடிகர் அஜித் குமாருக்கு விருது அளிக்கப்பட்டதற்கு பின் அரசியல் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் 2 தான் வரும். அது 11 ஆகாது. நீங்கள் அதை 11ஆக மாற்ற நினைக்காதீர்கள். நீங்கள் அரசியலாக பார்த்தால் என்னால் எதுவும் சொல்ல முடியாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |