யாரும் கேட்கமாட்டார்கள் என கீழ்த்தரமான வேலையை செய்றாங்க: மன்சூர் அலிகானுக்கு எதிராக கொந்தளித்த குஷ்பு
நடிகர் த்ரிஷா குறித்து பேசிய மன்சூர் அலிகான் பேசிய கருத்து குறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு
நடிகை த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சியை இயக்குநர் லோகேஷ் தருவார் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமடைந்ததாக மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு நடிகை த்ரிஷா, இனி மன்சூர் அலிகானுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நடிகை குஷ்பு
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பு பேசுகையில், "பெண்கள் குறித்து எப்படியும் கேவலமான விமர்சனங்களை முன்வைக்கலாம். யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என பலரும் இப்படி கீழ்த்தரமான விடயங்களை செய்கிறார்கள். இது போன்று பேசினால் இரண்டு நாள்களில் மறந்துவிடுவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களை மதிப்பவர்கள் இது போன்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள். தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் போது, இதனை நான் கேட்காமல் இருந்தால் அது எனக்கு கேவலம்.
பெண்களையும், அவர்களின் சுயமரியாதையையும் பாதுகாப்பதற்கு தான் இந்த பொறுப்பில் இருக்கிறேன். த்ரிஷா மட்டுமல்ல, எந்த நடிகையாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |