திடீரென பதவியை ராஜினாமா செய்த குஷ்பு.., தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரில் இருந்து விலகல்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து நடிகை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
குஷ்பு ராஜினாமா
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, கடந்த 2020 -ம் ஆண்டில் பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர், 2021 -ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இதன் பிறகு குஷ்புவுக்கு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு நேற்று, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இவரின் ராஜினாமா கடிதத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |