குஷ்பு கூறிய 'சேரி மொழி' விளக்கம் இப்படி இருந்தால்.. நடிகை வினோதினி பதிலடி
நடிகை குஷ்பு, சேரி மொழிக்கு பிரெஞ்சு மொழியில் அளித்த விளக்கத்திற்கு நடிகை வினோதினி பதிலடி கொடுத்துள்ளார்.
குஷ்புவின் விளக்கம்
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்தார்.
இந்த விவகாரத்திற்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தன்னை திமுக ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் நெட்டிசன் ஒருவர், "மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அடிக்கப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த குஷ்பு, தற்போது மகளிர் ஆணையம் த்ரிஷாவுக்காக எழுந்து வந்திருக்கிறது" என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த குஷ்பு, "திமுக குண்டர்கள் இப்படித்தான் முட்டாள்தனமான மொழியில் பேசுவார்கள். ஒரு பெண்ணை அவமதிக்கவோ, மன்னிக்கவோ உங்களை போல சேரி மொழியில் பேச முடியாது" என்றார்.
This is what DMK goons do. Use a foul language. But this is what they are taught. To insult a woman. Sorry can’t speak your cheri language but I would suggest wake up and look what was spoken and action taken. And if DMK does not teach you about laws, then shame on you being a… https://t.co/FC5d7pl9Gu
— KhushbuSundar (@khushsundar) November 21, 2023
நடிகை குஷ்புவின் இந்த கருத்துக்கு கண்டனம் வரவே, "பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்று அர்த்தம். அதை அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன்" என்று குஷ்பு கூறினார்.
நடிகை வினோதினி
இந்நிலையில் குணச்சித்திர நடிகை வினோதினி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "குஷ்பு அளித்த விளக்கம் Olé விளக்கம். இதனை தமிழக மக்கள் கோபப்படாமல் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது Olé என்ற ஸ்பானிஷ் மொழியைதான் நான் கூறியுள்ளேன். இதற்கு, ஸ்பானிஷ் மொழியில் தைரியம், ஆச்சரியம், ஒப்புதல் என்று தான் அர்த்தம். தமிழ் மொழியுடன் இதனை தொடர்புபடுத்த அவசியம் இல்லை. தமிழில் இதனை படித்தால் கெட்ட வார்த்தையாக இருக்கும். ஆனால், வேறு மொழியில் வேறு அர்த்தம் இருக்கும்" என பதிலடி கொடுத்துள்ளார்.
Olé explanation. Here, the Tamil people have to get into my mind and understand that I’ve used the word Spanish word Olé which means “an exclamation of approval, bravo”. Nothing connected to Tamil meaning ? https://t.co/0Tbeai2GAC
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) November 22, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |