குஷ்புவின் 'சேரி மொழி' விவகாரம்: பொது மன்னிப்பு கேட்க சொல்லும் காயத்ரி ரகுராம்
உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது என நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு பல எதிர்ப்புகள் வரும் நிலையில், அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.
மன்சூர் அலிகான் & த்ரிஷா
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வருகின்றன.
அந்தவகையில், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்ததன்படி, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் நகைச்சுவையாக பேசியிருப்பார்.., அவர் உணர்வுமிக்க தமிழர் என சீமான் ஆதரவு
சேரி மொழி விவகாரம்
இந்த விவகாரத்திற்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தன்னை திமுக ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் நெட்டிசன் ஒருவர், "மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அடிக்கப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த குஷ்பு, தற்போது மகளிர் ஆணையம் த்ரிஷாவுக்காக எழுந்து வந்திருக்கிறது. இதை வச்சாவது தாமரைக்கு இரண்டு ஓட்டு வருமா என்ற நட்பாசையில் செய்கிறது" என்று கூறியிருந்தார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த குஷ்பு, "திமுக குண்டர்கள் இப்படித்தான் முட்டாள்தனமான மொழியில் பேசுவார்கள். ஒரு பெண்ணை அவமதிக்கவோ, மன்னிக்கவோ உங்களை போல சேரி மொழியில் பேச முடியாது. மு.க.ஸ்டாலினை அழிக்க நினைக்கும் முட்டாள்கள் கூட்டம் இவர்கள் தான்" என முதலமைச்சரை டேக் செய்து கூறியிருந்தார்.
This is what DMK goons do. Use a foul language. But this is what they are taught. To insult a woman. Sorry can’t speak your cheri language but I would suggest wake up and look what was spoken and action taken. And if DMK does not teach you about laws, then shame on you being a… https://t.co/FC5d7pl9Gu
— KhushbuSundar (@khushsundar) November 21, 2023
மன்னிப்பு கேட்க வேண்டும்
தற்போது, குஷ்பு பேசிய சேரி மொழி விவகாரத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். அந்தவகையில் நடிகை காயத்ரி ரகுராம், "இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன். அதன் உணர்வை அறியாமல் சேரி என்று பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன்.
சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன். என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன். இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன்.
இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் செரி என்ற பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன். செரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக… https://t.co/3W8gQIBqr6
— Gayathri Raguramm ?? (@Gayatri_Raguram) November 21, 2023
குஷ்பு அக்கா தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். "சேரி மொழியை" பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |