40 கிலோ எடையை குறைத்த நடிகை குஷ்பூ.., ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்
Khushbu weight loss secret- நடிகை குஷ்பு சுந்தர் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 40 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.
கடுமையான டயட் இல்லாமல், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்து உடல் எடையைக் குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது உடல் எடை 98 கிலோவாக இருந்ததாக குஷ்பு கூறியுள்ளார்.

ரஜினிகாந்துடன் நடித்த அண்ணாத்த படத்தைப் பார்த்தபோது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், அதிக எடையால் முழங்கால் வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு அவர்கள் தனது எடை இழப்பு பயணம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.
எப்படி உடல் எடையை குறைத்தார்?
பசி இல்லாவிட்டாலும் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, நன்றாகப் பசி எடுத்த பிறகே சாப்பிடுவதாக குஷ்பு கூறியுள்ளார்.
மேலும், ஜப்பானியர்களின் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரிய தட்டில் அதிக உணவை எடுத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறிய தட்டில் உணவை எடுத்துச் சாப்பிடுவதாகக் கூறியுள்ளார். இதனால் உணவின் அளவைக் கட்டுப்படுத்த முடிவதாகத் தெரிவித்துள்ளார்.

உடல் எடையை குறைக்க தனக்கு பிடித்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்கவில்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.
மட்டன் பிரியாணி, இனிப்புகள், ஐஸ்க்ரீம் மற்றும் சர்க்கரை சேர்த்த பால் டீ ஆகியவற்றை அளவோடு சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஜிம்முக்குச் செல்வதற்குப் பதிலாக, கணவருடன் சேர்ந்து யோகா செய்வதாகவும் தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
உணவின் அளவை கட்டுப்படுத்துதல், நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்ற பழக்கங்கள் மூலம் தனது உடல் எடையைக் குறைத்ததாக அவர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |