வரலாற்று சாதனை படைத்த ஜார்ஜிய வீரர்! இறுதிப்போட்டிக்கு முன்னேறிய PSG
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வீரர் க்விச்சா க்வராட்ஸ்கெலியா சாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனை படைத்தார்.
சமனில் முடிந்த ஆட்டம்
பாயெர்ன் முனிச் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியின் லெக் 2 நடந்தது.
PSG (பாரிஸ் செயின்ட் ஜேர்மைன்) தரப்பில் ஓஸ்மானே டெம்பெலே ஒரு கோலும் (3வது நிமிடம்), பாயெர்ன் முனிச் வீரர் ஹாரி கேன் (90+4) ஒரு கோலும் அடிக்க ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
இதனால் (Aggregate) கோல் கணக்கில் (கடந்த போட்டியில் 5-4 என PSG வெற்றி) பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 6-5 என்ற கணக்கில் பாயெர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது.

க்விச்சா க்வராட்ஸ்கெலியா
இந்தப் போட்டியில் PSG வீரர் க்விச்சா க்வராட்ஸ்கெலியா (Khvicha Kvaratskhelia) சக வீரர் ஓஸ்மானே கோல் அடிக்க ஒரு துல்லியமான அசிஸ்ட் வழங்கினார்.
இதன்மூலம் ஜார்ஜிய வீரரான க்விச்சா க்வராட்ஸ்கெலியா, சாம்பியன்ஸ் லீக்கின் தொடர்ச்சியாக 7 நாக்அவுட் போட்டிகளில் ஒரு கோல் அல்லது ஒரு அசிஸ்ட்டைப் பதிவு செய்துள்ளார்.
இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனை ஆகும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |