18 நிமிடங்களில் 80% சார்ஜ்., 663 கிமீ ரேஞ்ச்! புதிய கியா EV6 கார் இந்தியாவில் அறிமுகம்
கியா நிறுவனம் 2025-ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட கியா இ.வி. 6 பேஸ்லிப்ட்(Kia EV6 Facelift) காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய எலக்ட்ரிக் காரின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கியா EV. 6 பேஸ்லிப்ட் சிறப்பம்சங்கள்
பற்றரி திறன்: முந்தைய மாடலில் 77.5 கிலோவாட் ஹவர் பற்றரி இருந்தது, தற்போது 84 கிலோவாட் ஹவர் பற்றரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
Turning heads with sleek aerodynamics and bold details. #Kia #EV6 #EV6GTLine #EV pic.twitter.com/7qZ5dzJRqO
— Hyundai Motor Group (@HMGnewsroom) March 13, 2025
ரேஞ்ச்: ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 663 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டார்: இந்த காரில் உள்ள டூயல் மோட்டார்கள் அதிகபட்சமாக 320 எச்.பி பவரையும், 605 என்.எம் டார்க்-கையும் வெளிப்படுத்தும்.
சார்ஜிங்: 350 கிலோவாட் டி.சி அதிவேக சார்ஜர் மூலம் 18 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு வசதிகள்: 8 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், லெவல் 2 அடாஸ், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
உட்புற வசதிகள்: 12.3 அங்குல இரு டிஸ்ப்ளே திரைகள், 3 ஸ்போக் டூயல் டோன் ஸ்டீயரிங் வீல், 12 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்பிளே போன்றவை உள்ளன.
வெளிப்புற மாற்றம்: ஆங்குலர் LED வடிவ DRL-கள், பம்பர், சக்கரங்கள், டெயில் லைட்டுகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
கியா EV. 6-யின் விலை
இந்த காரின் ஷோரூம் விலை ரூ.65.9 லட்சம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |