1100-க்கும் மேற்பட்ட EV6 கார்களை திரும்பப்பெறும் KIA.. என்ன காரணம்?
தென் கொரிய கார் நிறுவனமான KIA இந்தியாவில் தனது EV6 எலக்ட்ரிக் எஸ்யூவியை தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மார்ச் 3, 2022 முதல் ஏப்ரல் 14, 2023 வரை தயாரிக்கப்பட்ட 1,138 கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
Integrated Charging Control Unit-ல் (ICCU) ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கார்கள் திரும்பப் பெறப்படுவதாக தெரியவந்துள்ளது.
12-volt auxiliary battery மூலம் சார்ஜ் செய்யும் போது ஐசிசியூவில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
EVயில், காரின் விளக்குகள், மியூசிக் சிஸ்டம், ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு பேட்டரி முக்கியமானது என்று கியா இந்தியா தெரிவித்துள்ளது.
ICCU யூனிட் செயலிழந்தால், வாகனம் ஓட்டும்போது மின்சாரம் கிடைக்காமல் போகவும், பாதுகாப்பு அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
'EV6' காரில் உள்ள 12-வோல்ட் துணை பேட்டரி பல முக்கிய அமைப்புகளை ஆதரிக்கிறது. ICCU சரியாக செயல்படவில்லை என்றால் இந்த அமைப்புகள் அனைத்தும் தோல்வியடைய வாய்ப்புள்ளது. இதனால் வாகனம் ஓட்டும்போது மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.
இந்த சிக்கலை தீர்க்க பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்வதாக கியா இந்தியா விளக்கமளித்தது.
அந்த வாகனங்களில் உள்ள ஐசிசியூ யூனிட் மற்றும் 12 வோல்ட் ஆக்சிலரி பேட்டரியில் உள்ள குறைபாடுகளை இது சரி செய்யும் என்று கூறியுள்ளது.
ஆக்சிலரி பேட்டரியை சரியாக சார்ஜ் செய்யும் வகையில் ஐசிசியூ மென்பொருளை இலவசமாக அப்டேட் செய்யும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
EV6 உரிமையாளர்கள் தங்கள் அருகிலுள்ள Kia சேவை மையங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன் வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் கார் உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
KIA India, KIA EV6, Kia recalled over 1,100 units of EV6 in India