கன்னட பாட்ஷா கிச்சா சுதீப்பின் சொத்து மதிப்பு
தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் கிச்சா சுதீப்பின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
கிச்சா சுதீப்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். 2001ஆம் ஆண்டில் வெளியான 'ஹுச்சா' என்ற படத்தில் கிச்சா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார்.

ஒரு காலத்தில் ரூ 2க்கு பேனா விற்றவர்.,இன்று மாதம் 24 லட்சம் ஊதியம்: மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள்
இதன் காரணமாக சுதீப் சஞ்சீவ் என்ற தனது பெயரை கிச்சா சுதீப் (தற்போது சுதீபா) என்று அடையாளப்படுத்திக் கொண்டார். அதே சமயம் 'பாட்ஷா' என்றும் அழைக்கப்படுகிறார்.
பாடசாலை நாட்களில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று விரும்பிய சுதீப், 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
முதல் படம்
அதன் பின்னர் 1996யில் சின்னதிரை தொடரில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் இவரது நடிப்பில் முதல் படமான தயவ்வா 1997யில் வெளியானது.
எனினும், 2001யில் வெளியான சேது திரைப்படத்தின் ரீமேக்கான ஹுச்சா திரைப்படம்தான் சுதீப்பை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடித்துள்ள சுதீப் அதிக ஊதியம் பெறும் கன்னட நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
ஆடம்பர வாழ்க்கை
கிச்சா சுதீப் ஒரு நடிகராக ஆடம்பர வாழ்க்கையை நடத்துகிறார். விலையுயர்ந்த கார்கள், இருசக்கர வாகனங்களை இவர் வைத்துள்ளார்.
இவருக்கு பெங்களூருவில் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய ஆடம்பர பங்களா உள்ளது. இது ஹோம் தியேட்டர் மற்றும் தோட்டமும் அடங்கிய கோடிக்கணக்கான மதிப்பு கொண்டதாகும்.
சுதீப்பிற்கு சிறந்த சொகுசு கார்களை சேகரிப்பது பிடிக்கும். இவரிடம் BMW M5, ஜாகுவார் XJL, மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G63 மற்றும் Range Rover Vogue போன்ற விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார்கள் உள்ளன.
கார்கள் மட்டுமின்றி விலையுயர்ந்த கடிகாரங்களையும் விரும்பும் சுதீப், லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள ரோலக்ஸ், Hublot மற்றும் Audemars Piguet போன்ற பிராண்டுகளை வைத்திருக்கிறார்.
அதேபோல் ஹார்லி-டேவிட்சன் மற்றும் டுகாட்டி போன்ற விலையுயர்ந்த சூப்பர் பைக்குகளையும் சுதீப் வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
நடிகராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் சுதீப் அடையாளம் காணப்படுகிறார். தாராளமாக நன்கொடை அளிக்கும் நபரான சுதீப், ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்கவும், ஏழைகள் சிகிச்சை பெறவும் உதவி புரிவதை தொடர்ந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஒரு எபிசோடிற்கு சுதீப் 1 - 2 கோடி வரை ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.
ஒரு படத்திற்கு ரூ.8 முதல் ரூ.10 கோடி வரை ஊதியம் பெறும் கிச்சா சுதீப்பின் மொத்த சொத்து மதிப்பு 20 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்புள்ள ரூ.165 கோடிகள்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |