சாப்பிட ஒரே ஒரு ரொட்டி மட்டுமே.., 7 வயதில் காணாமல் போன சிறுவன் 30 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி
7 வயதில் காணாமல் போன சிறுவன் 30 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சாஹிபாபாத்தில் ராஜு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இவர், தனது 7 வயதில் கடந்த 1993 -ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் திகதி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக ராஜுவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறுவனாக இருக்கும்போது ராஜூவை கடத்தியவர்கள், ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை நாள் முழுவதும் வேலை வாங்கியுள்ளனர்.
மேலும், சாப்பிடுவதற்கு ஒரே ஒரு ரொட்டி மட்டுமே கொடுத்துள்ளனர். இரவில் ராஜூ தப்பிக்காமல் இருக்க அவரை கட்டி வைத்துள்ளனர்.
பின்னர், பல ஆண்டுகள் கழித்து டெல்லிக்கு தப்பி சென்ற ராஜு பொலிஸாரிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, சமூக வலைதளம் மூலமாக ராஜூவை கண்டுபிடிக்க பொலிஸார் உதவியுள்ளனர்.
இந்நிலையில், 7 வயதில் காணாமல் போன சிறுவன் 30 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |