கடத்தப்பட்ட பிரித்தானிய செல்வந்தர் பத்திரமாக மீட்பு: ஈக்வடார் பொலிஸார் அசத்தல்
ஈக்வடாரில் கடத்தப்பட்ட பிரித்தானிய நாட்டை சேர்ந்த செல்வந்தர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட பிரித்தானியர்
ஈக்வடார் நாட்டில் கடந்த சனிக்கிழமை 78 வயது பிரித்தானிய செல்வந்தர் கொலின் ஆம்ஸ்ட்ராங்(Colin Armstrong) தன்னுடைய மனைவி கேத்ரின் பாவோலா சாண்டோவுடன்( Katherine Paola Santos) சேர்த்து குவாயாகில்(Guayaquil) நகரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் இருந்து கடத்தப்பட்டனர்.
பொலிஸ் வேடமிட்ட 15 குற்றவாளிகள் கொலின் சொத்திற்குள் நுழைந்து இருவரையும் மிரட்டி கொலின் ஆம்ஸ்ட்ராங்கின் கருப்பு BMW காரில் கடத்தி சென்றுள்ளனர்.
Credit: Instagram
கடத்தப்பட்ட பிரித்தானிய செல்வந்தர் கொலின் ஆம்ஸ்ட்ராங் ஈக்வடார் நாட்டின் விவசாய நிறுவனமான அக்ரிபேக்கின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரமாக மீட்ட பொலிஸார்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட பிரித்தானிய செல்வந்தர் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை ஈக்வடார் பொலிஸ் தலைவர், சீசர் அகஸ்டோ ஜபாடா, பிரித்தானிய செல்வந்தவர் கொலின் உயிருடன் மீட்கப்பட்டதையும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளார்.
EFE/REX/Shutterstock
இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், மனாவி செல்லும் வழியில் எங்களது படையினர் கொலின் ஆம்ஸ்ட்ராங்கை பத்திரமாக விடுவித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் மிகவும் பாதுகாப்பாகவும், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செல்வந்தர் கொலின் ஆம்ஸ்ட்ராங் ராஜாங்க சேவைக்காக 2011ம் ஆண்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Instagram
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Colin Armstrong, British Millionaire, Ecuador, British Millionaire KIdnapped, Rescued, Police, Money