பிரான்சில் பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தல்: கைப்பைக்குள் வைத்து கடத்தியதாக தகவல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று தாய்சேய் மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பான திடுக்கிடவைக்கும் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
பாரீஸில் பச்சிளங்குழந்தை கடத்தல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Seine-Saint-Denis என்னுமிடத்தில் அமைந்துள்ள Robert-Ballanger என்னும் மருத்துவமனையிலிருந்து குழந்தை ஒன்று திங்கட்கிழமையன்று கடத்தப்பட்டது.
AFP via Getty Images
குறை பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தையை அதன் பெற்றோரே கடத்திச் சென்றிருக்கலாம் என தற்போது பொலிசார் கருதுகிறார்கள்.
பிரச்சினை என்னவென்றால், அந்தக் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளதால், அதற்கு உடனடி மருத்துவ உதவி தேவை. அதுவும், 12 மணி நேரத்துக்குள் அதற்கு முறையான மருத்துவர்களின் கவனிப்பு கிடைக்காவிட்டால் அந்தக் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.
Santiago என பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தையின் தந்தையான 23 வயது நபரும், தாயான 25 வயதுப் பெண்ணும் கைப்பை ஒன்றில் வைத்து அந்தக் குழந்தையைக் கடத்திச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அந்த தம்பதியர், குழந்தையுடன் பெல்ஜியம் நாட்டுக்கு தப்பியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
பொலிசார் அவர்களை தீவிரமாகத் தேடிவரும் நிலையில், அவர்களை பொதுமக்கள் யாராவது காண நேர்ந்தால், அவர்களை அணுகவேண்டாம் என்றும், உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்குமாறும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |