சிறுநீரக பாதிப்பை எச்சரிக்கும் 5 முக்கிய வலிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க
நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று.
சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.
மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.
சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தவகையில், சிறுநீரக பாதிப்பை எச்சரிக்கும் 5 அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
5 அறிகுறிகள் என்ன?
கீழ் முதுகு வலி- ஒரு பக்கத்தில் மட்டும் கீழ் முதுகு வலித்தால், சிறுநீரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது என்று அர்த்தம். இவ்வலி குமட்டல், காய்ச்சல் போன்றவற்றுடன் சேர்ந்து வரும்.
நெஞ்சி வலி- சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டிருந்தாலும், நெஞ்சு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இவ்வலி சிறுநீரக நோய் முற்றிய நிலையை உணர்த்துகின்றன.
அடிவயிற்று வலி- அடிவயிற்றுப் பகுதியில் வலி, குமட்டல் போன்றவற்றை சந்தித்தால் சிறுநீரக பாதிப்புகளை இருக்கலாம். எனவே, உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

தலை வலி- தலை வலி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை சிறுநீரக சேதத்தினை எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
கால் வீக்கம்- சிறுநீரக சேதத்தின் அறிகுறியாகும். சிறுநீரகத்தால் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் போனால் கால்கள் மற்றும் பாதங்களில் வலி அல்லது வீக்கம் ஏற்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |