சிறுநீரகத்தில் கல் இருப்பதை காட்டும் அறிகுறிகள்..
ஒவ்வொரு ஆண்டும் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிறுநீரகக் கல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிற நோய்கள் சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
இதில் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பலரும் பல விதமான முயற்சிகளை எடுப்பது வழக்கம். ஆனால் ஒருவருக்கும் இந்நோய் வருவதை எப்படி கண்டிறிவது என்பது பற்றி தெரியாது. எனவே அதன் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.
சில சிறுநீரக கற்கள் மணல் துகள் போல சிறியதாக இருக்கும். மற்றவை பெரியதாக இருக்கும்.
இந்த கற்கள் பெரிதாக இருந்தால், மருத்துவ சிகிச்சை மூலமாக மட்டுமே அகற்றவோ அல்லது உடைக்கவோ முடியும்.
ஆரம்பகட்டத்திலேயே நாம் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பயப்பட தேவையில்லை.
அறிகுறிகள்
-
கீழ் முதுகில் இருபுறமும் கடுமையான வலி
-
சிறுநீரில் இரத்தம்
- குமட்டல் அல்லது வாந்தி
- காய்ச்சல் மற்றும் குளிர்
-
துர்நாற்ற சிறுநீர்
இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதே. கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம்.
எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்திருப்பது நல்லது.
சாப்பிட வேண்டிய உணவுகள்
-
காரட்
- பாகற்காய்
- இளநீர்
-
வாழைப்பழம்
- எலுமிச்சை
- அன்னாச்சி பழம்
- கொள்ளு
- பாதாம்
- பருப்பு
-
பார்லி ஓட்ஸ்
- உப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |