பெற்றோருக்கு தெரியாமல் போதைப்பொருள் கடத்தும் ஓன்லைன் கேம் விளையாடும் குழந்தைகள்! வலையில் சிக்குவது எப்படி? பகீர் தகவல்
பிரித்தானியாவின் போதைப்பொருள் கும்பல்கள், Fortnite என்ற ஆன்லைன் வீடியோ கேம் மூலம் குழந்தைகளை போதைப்பொருள் கடத்தல்காரர்களாக மாற்றுகின்றன என முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களுக்கே தெரியாமல் போதைப்பொருட்களை கடத்துவதற்கும் பாதுகாப்பாக பதுக்கி வைப்பதற்கும் சன்மானமாக, போதைப்பொருள் கும்பல் குழந்தைகளுக்கு ஆன்லைன் விளையாட்டில் சில பொருட்களை வாங்கி தருவதாக கூறப்படுகிறது.
குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் அபாயத்தில் உள்ள குழந்தைகளுக்காக சேவையாற்றி வரும் முன்னாள் போதைப்பொருள் கும்பல் தலைவர் Matthew Norford, ஆன்லைன் கேம் மூலம் பலர் போதைப்பொருள் உலகில் இணைந்திருப்பதாகக் கூறுகிறார்.
உள்ளூர் பகுதியைச் சேர்ந்த வயதானவர்களுடன் விளையாடுவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சிலர் அந்த விறுவிறுப்பை விரும்புகிறார்கள். அவர்கள் அந்த கும்பலையும் அதன் ஒரு பகுதியாக இருக்கவும் விரும்புகிறார்கள் என்று Norford கூறினார்.
கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தினமும் இரவு முழுவதும் குழந்தைகளுடன் இணைந்து விளையாடி அவர்களுடன் பழகுவார்கள், ஆன்லைன் விளையாட்டில் சில பொருட்களை வாங்கி தந்து வலையில் சிக்க வைப்பார்கள்.
Fortnite கேமில் V-Bucks என்ற விளையாட்டு நாணயம் உள்ளது, இதன் மூலம் விளையாட்டில் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வெவ்வேறு அனிமேஷன்கள் போன்றவற்றை வாங்கலாம்.
இப்போதைக்கு, பிரித்தானியாவில் V-Bucks 6.49 பவுண்டுக்கு வாங்கலாம். Fortnite மட்டும் விளையாட்டு பொருட்களை வாங்க அதன் சொந்த விளையாட்டு நாணயத்தைப் பயன்படுத்தும் விளையாட்டு அல்ல, இதுபோல் பல ஆன்லைன் கேம்கள் விளையாட்டு நாணயத்தைப் பயன்படுத்துகின்றன.
இருப்பினும், இளைய தலைமுறை விளையாட்டாளர்களிடையே Fortnite மிகவும் பிரபலமாக உள்ளது என Norford கூறினார்.