தோனி தொட்டதெல்லாம் தூள் பறக்குது - பொல்லார்ட் நெகிழ்ச்சி
“தோனி எந்த மைதானத்தில் விளையாடச் சென்றாலும், சேப்பாக்கத்தில் இருக்கும் அளவுக்கான ஆதரவு அவருக்கு இருக்கும்” என்று மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
தோனியின் கடைசி ஆட்டம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மாஸா எண்ட்ரி கொடுத்த தோனி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியை காண தோனி ரசிகர்கள் லட்சக்கணக்கில் ரசிகர்கள் மஞ்சள் உடையுடன் வந்து சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்தனர்.
4 வருடங்களுக்கு பிறகு தோனியை மைதானத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் தோனி எண்ட்ரி கொடுத்தபோது, லட்சக்கணக்கான ரசிகர்கள் அலைக்கடலாக எழுந்து ஆர்ப்பரித்தனர். ரசிகர்களின் கைத்தட்டலுடன், கூச்சலுடன் அரங்கமே ஒரு கணம் அதிர்ந்து போனது. மாஸாக நடந்து வந்த தோனி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பொல்லார்ட் நெகிழ்ச்சி
“தோனி எந்த மைதானத்தில் விளையாடச் சென்றாலும், சேப்பாக்கத்தில் இருக்கும் அளவுக்கான ஆதரவு அவருக்கு இருக்கும்” என்று மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
எம்.எஸ்.தோனிக்கு சேப்பாக்கத்தில் எந்த அளவுக்கு ஆதரவு இருக்குமோ, அதே அளவுக்கான ஆதரவு, நடப்பு ஐபிஎல் சீசனில், வேறு எந்த மைதானத்தில் விளையாடச் சென்றாலும் இருக்கும். அவர் செய்துள்ள விஷயங்களால் ரசிகர்களின் அன்பை பெற்றிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்தபோது, இதேபோல இந்தியாவில் எங்கு சென்றாலும் அணிக்கு ஆதரவு இருக்கும் என்று கைரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.