திகிலூட்டும் தருணம்... பிரித்தானியர்களின் படகை சூழ்ந்து தாக்கிய 30 திமிங்கலங்கள்
ஜிப்ரால்டர் அருகே பிரித்தானியர்களால் இஅயக்கப்படும் படகு ஒன்றை 30 திமிங்கலங்கள் சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
திகிலூட்டும் இந்த வீடியோவை அந்த படகில் பயணித்த ஒருவரே வெளியிட்டுள்ளார். குறித்த தாக்குதலில் படகு சேதமடைய, பயணத்தை மேலும் தொடர முடியாமல் குழுவினர் தத்தளித்துள்ளனர்.
குறித்த சொகுசு படகானது கென்டில் உள்ள ராம்ஸ்கேட் பகுதியில் இருந்து கிரேக்கம் நோக்கி புறப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரித்தானிய மாலுமிகள் பணியாற்றியுள்ளனர்.
ஸ்பெயின் கடற்கரை பகுதியில் இருந்து 25 மைல்கள் தொலைவில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படகை ஒரு அடி கூட முன் செல்ல விடாமல், அந்த திமிங்கலங்கள் தாக்குதலை தொடர்ந்துள்ளது.
இதனையடுத்து, படகின் இயந்திரம் மற்றும் மின்சாரத்தை முடக்கியுள்ளனர். ஆனாலும் திமிங்கலங்கள் தாக்குதலை நிறுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் படகு மூழ்கடிக்கப்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டதாக மாலுமிகள் தெரிவித்துள்ளனர். திடீரென்று 30 திமிங்கலங்கள் சூழ்ந்து கொண்டு ஏன் தாக்குதலில் ஈடுபட்டன என்பது தங்களுக்கு புரியவில்லை எனவும்,
ஆனால், அந்த குழுவில் ஒரு திமிங்கலம் ஒருமுறை ஏதேனும் படகால் காயம் பட்டிருக்கலாம், அதனாலையே பழி வாங்கியதாக நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
தற்போது சேதமான படகை ஜிப்ரால்டரில் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பில் வெளியான காணொளி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.