கனேடியர் படுகொலையில் இந்தியாவின் பங்கு உறுதி... வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய பிரதமர் ட்ரூடோ
கனடாவில் சீக்கியர் தலைவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்திய அரசாங்கம்
இந்திய அதிகாரிகளால் கனேடிய மண்ணில் இந்தப் படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர் ட்ரூடோ, இது மிக மிக தீவிரமான விடயம் என்றார். இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் கனடாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ட்ரூடோ கோரியுள்ளார்.
BREAKING: Trudeau's statement regarding allegations of India's involvement in killing of Sikh leader in Canada pic.twitter.com/ECmwQqnkNY
— The Spectator Index (@spectatorindex) September 18, 2023
மேலும், வேறொரு நாட்டில் நீதித்துறைக்கு புறம்பான செயல்பாடுகள் குறித்த தனது நிலைப்பாடு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் G20 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரிடையாகவும் தனிப்பட்ட முறையிலும் விவாதித்ததாகவும், ஆனால் பிரதமர் மோடி தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
Credit: Ben Nelms/CBC
தூதரக அதிகாரி வெளியேற்றம்
ஆனால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் சிலரால் முன்னெடுக்கப்படுவதில் இந்தியா கவலை கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் நமது இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும் என ட்ரூடோ அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
Credit: Ben Nelms/CBC
கடந்த ஜூன் 18ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் சீக்கிய குருதுவார ஒன்றின் வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார். இந்திய அரசாங்கத்தால் பிரிவினைவாதி என குறிப்பிடப்படும் நிஜ்ஜர் படுகொலை, கனடாவில் சீக்கிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தற்போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இந்தியாவை குற்றஞ்சாட்டியுள்ளதுடன், பவன் குமார் ராய் என்ற தூதரக அதிகாரியையும் வெளியேற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |