பிரித்தானிய ராணிக்கு வாழ்த்து சொன்ன வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலி விழாவை முன்னிட்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் தலைவரான ராணி இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டுகால சிம்மாசன ஆட்சிப் பொறுப்பை குறிக்கும் பிளாட்டினம் ஜூபிலி விழா இன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், உலகில் மிகவும் பதற்றமான காலகட்டங்களிலும் எத்தகைய அச்சமும் இன்றி பல்வேறு ஏவுகணை சோதனைகளை செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலி விழாவிற்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வடகொரியாவிற்கும், பிரித்தானியாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்தாலும், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து இராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இதுத் தொடர்பாக வட கொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் பிரித்தானிய மன்னரைப் போலவே தனது தந்தையிடமிருந்து அரச பதவியை பெற்ற கிம் ஜாங்-உன் பிரித்தானிய ராணிக்கு வாழ்த்து கடிதத்தை அனுப்பியுள்ளார் என தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தகவலில், கடிதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற விவர உள்ளடக்கங்களை வெளியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்த தகவலில், கிம் ஜாங் உன் பிரித்தானிய ராணியின் பிளாட்டின் ஜூபிலியை குறிக்கும் வகையிலான வாழ்த்து கடிதத்தை அனுப்பியுள்ளார், அவற்றில் நாங்கள் ராஜதந்திர உறவுகளை கொண்டு இருக்கும் நாடுகளில் இருந்து செய்திகளைப் பெறும் வகையிலான வழக்கமான நடைமுறையில் ஏற்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.