மூன்றாவது கணவரை விவாகரத்து செய்த பல கோடிகளுக்கு அதிபதியான பிரபல பெண்! மாதம் ரூ. 7 கோடி ஜீவனாம்சம்
உலக புகழ்பெற்ற கிம் கர்தாஷியன் தனது மூன்றாவது கணவரை விவாகரத்து செய்துள்ள நிலையில் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மூன்றாவது கணவர்
ஹாலிவுட் பிரபலங்களான கிம் - கன்யே வெஸ்ட் 2014ல் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்னதாக டாமன் தாமஸ், கிரிஸ் ஹரம்பிரீஸ் ஆகிய இருவரை மணந்து இருவரை பிரிந்திருந்தார் கிம்.
இந்த நிலையில் மூன்றாவது கணவரான கன்யேயிடம் இருந்து கிம் கர்தாஷியன் விவாகரத்து கோரினார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கணவர் கன்யே தனது மனைவியான கிம் கர்தாஷியனுக்கு மாதம் $200,000 (ரூ.7,37,47,200) குழந்தைகள் பரமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Kevin Mazur/Getty Images
சொத்து மதிப்பு
மேலும் குழந்தைகளின் கல்விச் செலவு, பாதுகாப்பு ஆகியவற்றில் இருவரும் சரிபாதியாக செலவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் கர்தாஷியன் தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.4 பில்லியன் ஆகும்.
மாதாந்திர தொகையை கன்யே ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலேயே கிம் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.