ஹரியும், மேகனும்தான் அப்படி கூறினர்: புயலைக் கிளப்பிய விடயம்..இறுதியாக வெளிப்படுத்திய கவர்ச்சி பெண் பிரபலம்
கிரிஸ் ஜென்னரின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட தங்களின் புகைப்படங்களை நீக்குமாறு கேட்டது மேகன் மற்றும் ஹரிதான் என கிம் கர்தாஷியன் இறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.
விருந்தின் புகைப்படங்கள்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கிரிஸ் ஜென்னரின் 70வது பிறந்தநாள் விழாவில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் அவருடன் நெருக்கமாக இருந்ததை, அந்த விருந்தின் வெளிப்படையான புகைப்படங்கள் காட்டின.

அந்தப் படங்கள் 'Photo-gate' என்று அழைக்கப்படும் ஒரு உலகளாவிய ஊடகப் புயலைக் கிளப்பியது மற்றும் ஹாலிவுட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், கவர்ச்சி பெண் பிரபலம் கிம் கர்தாஷியன் (Kim Kardashian) இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார். இதனால் அவற்றை நீக்கக் கூறியது யார் என்பது குறித்த குழப்பம் ஏற்பட்டது. இரண்டு மாதங்களாக இது நீடித்தது.
வெளிப்படுத்திய கிம் கர்தாஷியன்
இந்த நிலையில், கிம் கர்தாஷியன் தற்போது அந்த புகைப்படங்களை நீக்கக் கூறியது இளவரசர் ஹரி (Harry) மற்றும் மேகன் மார்க்கல் (Meghan Markle) ஆகிய இருவரும்தான் என்று இறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவர், "அது ஒரு நினைவு நாள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள் என்றும், ஒரு விருந்தில் தாங்கள் காணப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்றும் நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் புகைப்படங்கள் அரச குடும்ப தம்பதியரின் சம்மதத்துடனே ஒன்லைனில் பகிரப்பட்டன என்பதையும் திட்டவட்டமாகக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |