கிரிப்டோகரன்சி கோடீஸ்வரரை கடத்தி விரலை வெட்டிய முகமூடி கொள்ளையர்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், முகமூடி கொள்ளையர்கள் கிரிப்டோகரன்சி கோடீஸ்வரர் ஒருவரை கடத்தி விரலை வெட்டிய பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
முகமூடி கொள்ளையர்கள் பயங்கரம்
வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், பாரீஸில் நடந்து சென்றுகொண்டிருந்த 60 வயது நபர் ஒருவர் முகமூடிக் கொள்ளையர்களால் கடத்தப்பட்டார்.
அந்த நபரும், அவரது மகனும் கிரிப்டோகரன்சி மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்கள்.
கோடீஸ்வரரான அவரை பிணைக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்ட முகமூடிக் கொள்ளையர்கள், அவரது விரல்களில் ஒன்றை வெட்டியுள்ளார்கள்.
அவரது மகனிடம் 5 முதல் 7 மில்லியன் யூரோக்கள் கேட்டு மிரட்டியுள்ளார்கள் அவர்கள்.
ஆனால், சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு, ஆயுதம் தாங்கிய பொலிசார் அந்த முகமூடிக் கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்துவிட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து பேரும் 20 முதல் 27 வயது வரையுள்ள இளைஞர்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |