Kinetic Green அறிமுகம் செய்துள்ள புதிய மின்சார மொபெட்
இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் Kinetic Green நிறுவனம் புதிய E-Luna Prime எனும் மின்சார மொபெடை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த E-Luna Prime மொபெடின் விலை ரூ.82,490 (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபெட் நகர மற்றும் கிராமப்புற பயணிகளுக்கான சுற்றுசூழலுக்கு உகந்த மற்றும் செலவுச்சுமை குறைந்த வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
E-Luna Prime இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிமீ மற்றும் 140 கிமீ பயணிக்கக்கூடியதாக இருக்கும்.
16 இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் விசாலமான front-loading பகுதி ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்த மொபெட் தினசரி பயணத்திற்கு வசதியானதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |