80களின் புகழ்பெற்ற வடிவத்தில் Kinetic-ன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை 28 வெளியீடு
Kinetic Green நிறுவனம் 1980களில் பெரும் வரவேற்பைப் பெற்ற Kinetic Honda DX வடிவத்தில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜூலை 28, 2025 அன்று அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ஸ்கூட்டர் சமீபத்தில் சோதனை ஓட்டங்களில் பொதுவழிகளில் காணப்பட்டது.
புதிதாக வரவுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், Kinetic Honda DX போலவே தட்டையான முன் பகுதி (front apron) மற்றும் சிறிய கண்ணாடியுடன் கூடிய ஹேண்டில்பார் cowling ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் வடிவம் பழைய ஸ்டைலை நினைவுபடுத்துகிறது.
இந்த ஸ்கூட்டருக்கு hub-mounted electric motor அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்புறத்தில் Telescopic Fork மற்றும் பின்புறத்தில் dual shock absorbers உடைய swingarm அமைப்பு காணப்படும்.
LED விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், மற்றும் USB சார்ஜிங் போர்ட் போன்ற நவீன வசதிகளும் வழங்கப்படலாம்.
இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ஏற்கனவே நிலைபெற்று இருக்கும் Bajaj Chetak மற்றும் TVS iQube ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நிகராக இருக்கும்.
கைனட்டிக் நிறுவனத்தின் இந்நடவடிக்கை பழைய இனிமையான நினைவுகளை புதிய தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kinetic electric scooter launch 2025, Kinetic retro EV scooter, Kinetic Honda electric version, Kinetic Green scooter July 28, New Kinetic e-scooter India, Bajaj Chetak vs Kinetic EV, Retro style electric scooter India, Upcoming electric scooters 2025, TVS iQube competitor scooter, Kinetic Honda electric comeback