திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியம் மூன்று படுக்கையறைகள்: மன்னர் சார்லஸ் கமீலா தம்பதியர் குறித்த ஒரு சுவாரஸ்ய செய்தி
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கும் கமீலாவுக்கும் 2005ஆம் ஆண்டு திருமணமானது.
திருமணமாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆன நிலையில், தம்பதியரின் திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியம் குறித்த ஒரு தகவலை அவர்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மன்னர் சார்லஸ், ராணி கமீலா திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியம் குறித்து, அவர்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் ஒரு சுவாரஸ்ய தகவலைச் சொல்லியிருக்கிறார்.
பிரித்தானிய ராஜ குடும்ப மரபுப்படி, பெரும்பாலான ராஜ குடும்பத்தினருக்கு திருமணமானாலும் தனித்தனி படுக்கையறைகள் இருக்குமாம்.
மன்னர் சார்லஸின் கிளாரன்ஸ் இல்லத்திலோ இரண்டு அல்ல, மூன்று படுக்கையறைகள் உள்ளன. ஒன்று, சார்லஸ் விருப்பப்படி வடிவமைக்கப்பட்ட படுக்கையறை, மற்றொன்று, ராணி கமீலா விருப்பப்படி வடிவமைக்கப்பட்ட படுக்கையறை. இதுபோக மூன்றவதாக ஒரு படுக்கையறை உள்ளதாம். விருப்பப்படும்போது மன்னரும் ராணியும் சேர்ந்து நேரம் செலவிடுவதற்காகவாம் அந்த படுக்கையறை.
தம்பதியரின் திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியமே இந்த மூன்று படுக்கையறைகள்தான் என்கிறார் அவர்களுடைய நண்பர்.
மன்னர் சார்லஸ் கமீலா தம்பதியரின் திருமண வாழ்க்கையின் வெற்றியின் பின்னணியில் இன்னும் இரண்டு விடயங்களும் உள்ளனவாம்.
அவற்றில் ஒன்று தேநீர். ஆம், சில நேரங்களில் இருவரும் இணைந்து அமர்ந்து பேசிக்கொண்டே தேநீர் அருந்துவார்களாம்.
மூன்றாவது விடயம் இதற்கு நேர் மாறானது. அது, புத்தகம் படிப்பதாம். இருவரும் ஒரே அறையிலும் இருக்கவேண்டும், அதே நேரத்தில் அமைதியும் வேண்டும். குறிப்பாக வேறு எந்த நாட்டுக்காவது செல்லும்போது, இருவரும் ஒரே அறையில், ஆனால் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்து அமைதியாக புத்தகம் படிப்பார்களாம்.