தனித்தனி படுக்கை அறைகளில் தூங்கும் மன்னர் சார்லசும் ராணி கமீலாவும்: என்ன பிரச்சினை?
மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் கணவரும் மனைவியும் என்றாலும், அவர்களுக்கு தனித்தனியே வீடுகள் உள்ளன. இருவரும் வெவ்வேறு படுக்கை அறைகளில் தூங்குவதாகவும் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை?
அப்படியானால், மன்னருக்கும் ராணிக்கும் ஏதாவது பிரச்சினையா? கணவன் மனைவியாக இருந்தும் அவர்கள் வெவ்வேறு படுக்கையறைகளில் தூங்குவது ஏன்?
அதாவது, மன்னர் சார்லசுக்கும் கமீலாவுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை.
ABC
மன்னர் சார்லஸ் நீண்ட காலமாக முதுகு வலியால் அவதியுற்று வருகிறார். ஆகவே, தனியாக தூங்குவது அவருக்கு சற்று வசதியாக உள்ளது.
அதேபோல, தன் படுக்கையறை இப்படித்தான் இருக்கவேண்டும் என, தன் விருப்பப்படி தன் படுக்கையறையை வடிவமைத்துள்ளாராம் கமீலா. அங்கு தூங்குவது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதாம்.
ஒரு ரகசியம்
இன்னொரு ரகசியம் என்ன தெரியுமா? மன்னர் சார்லசுக்கும், ராணி கமீலாவுக்குமாக மூன்று படுக்கையறைகள் உள்ளன.
Vanity Fair
மன்னருக்கு ஒன்று, கமீலாவுக்கு ஒன்று. எப்போதாவது இருவரும் சேர்ந்து தூங்க ஆசைப்பட்டால், அதற்காக ஒரு படுக்கையறையும் தயாராக இருக்குமாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |