இளவரசர் ஹரியின் மகனுடைய தோலின் நிறம் குறித்து பேசிய இனவெறுப்பாளர்கள் இவர்கள்தான்: உண்மை வெளியானதால் பிரித்தானியாவில் பரபரப்பு
இளவரசர் ஹரியின் தோலின் நிறம் குறித்து விமர்சித்தவர்கள் யார் என தெரியவந்துள்ளதால், பிரித்தானிய ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
ராஜ குடும்பத்தில் இனவெறுப்பாளர்கள்
பிரித்தானிய இளவரசரான ஹரியின் மனைவி மேகன் ஒரு கலப்பினப் பெண். அதாவது, அதாவது அவரது தாய் கருப்பினத்தவர், தந்தை வெள்ளையினத்தனர்.
ஆகவே, மேகன் கருவுற்றபோது, அவரது குழந்தை என்ன நிறத்திலிருக்கும் என ராஜ குடும்பத்தில் பேச்சு அடிபட்டுள்ளது.
ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியபின் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்கள். அப்போது, தன் மகனுடையை நிறம் குறித்து ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக வெளிப்படையாக கூறியிருந்தார் மேகன்.
சுயசரிதை எழுதிய நபர் உருவாக்கிய பிரச்சினை
பின்னர், ஹரி தனது சுயசரிதையாக 'Spare' என்னும் புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தை எழுத, ஹரி மேகன் தம்பதியருக்கு உதவிய எழுத்தாளர், ஓமிட் ஸ்கோபி (Omid Scobie) என்பவர்.
தற்போது ஓமிட் ராஜ குடும்பம் தொடர்பில் மற்றொரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் பெயர், ENDGAME: Inside the Royal Family and the Monarchy’s Fight for Survival.
பிரச்சினை என்னவென்றால், ஓமிட் எழுதிய இரண்டாவது புத்தகத்தின் டச்சு மொழிப்பெயர்ப்பில், தவறுதலாக, ஹரி மேகன் தம்பதியரின் மகனுடைய நிறத்தைக் குறித்து பேசிய இனவெறுப்பாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
பிரித்தானியாவில் உருவாகியுள்ள சர்ச்சை
ஆக, மேகன் தம்பதியரின் மகனுடைய நிறத்தைக் குறித்து பேசியவர்கள் யார் என்பது தற்போது தெரியவந்துவிட்டது. இதற்கிடையில், பிரபல ஊடகவியலாளரான Piers Morgan, சம்பந்தப்பட்டவர்கள் பெயரை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிபடையாகவே சொல்லிவிட்டார்.
பிரித்தானிய ராஜ குடும்பத்திற்கு பணம் கொடுக்கும் மக்கள், மேகன் தம்பதியரின் மகனுடைய நிறத்தைக் குறித்து பேசியவர்கள் யார் யார் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
ஹரியின் மகனை இனரீதியாக விமர்சித்தது யார்?
இளவரசர் ஹரியின் தோலின் நிறம் குறித்து விமர்சித்ததாக எழுத்தாளர் ஓமிட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது ஒருவருடைய பெயர் அல்ல, இரண்டு பேருடைய பெயர்கள்.
ஒன்று, மன்னர் சார்லஸ், இரண்டு, வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட்.
ஆக, ஒரே நாளில் ராஜ குடும்பத்தை சந்தி சிரிக்கவைத்துவிட்டார்கள் ஓமிடும், Piers Morganம். இதனால் ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ள நிலையில், அடுத்து பிரித்தானியாவில் என்ன பூகம்பம் வெடிக்கப்போகிறதோ தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |