மன்னர் சார்லசும் ட்ரம்பும் உறவினர்களா? ராஜ குடும்ப நிபுணர் தெரிவித்துள்ள சுவாரஸ்ய தகவல்
மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள நிலையில், மன்னரும் ட்ரம்பும் தூரத்து உறவினர்கள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லசும் ட்ரம்பும் உறவினர்களா?
ட்ரம்ப் உலகத் தலைவர்கள் பலரை கேலி செய்தாலும், மன்னர் சார்லசை பொதுவாக புகழ்ந்து பேசுவதுதான் அவர் வழக்கம்.

இந்நிலையில், அவர் சிறந்த மனிதர் என அழைக்கும் மன்னர் சார்லஸ், ட்ரம்பின் தூரத்து உறவினர் என்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர்.
ராபர்ட் ஹார்ட்மேன் என்னும் அந்த எழுத்தாளர், மன்னர் சார்லஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இருவருமே, மூன்றாம் லென்னாக்ஸ் பிரபுவான ஜான் ஸ்டூவர்ட் (John Stewart, 3rd Earl of Lennox) என்பவரின் மரபில் வந்தவர்கள் என்கிறார்.
அதாவது, மன்னர் சார்லசும், ட்ரம்பும், ஸ்கொட்லாந்து கோமகனான ஜானுடைய மரபில் வந்த 15ஆவது தலைமுறை சகோதர முறை உறவினர்கள் என்கிறார் ராபர்ட்.

இந்த கோமகன் ஜான், ஸ்கொட்லாந்து மன்னரான இரண்டாம் ஜேம்ஸின் பேரனின் மகன் ஆவார்.
ஆக, ஏற்கனவே மன்னரை புகழ்ந்து தள்ளும் ட்ரம்புக்கு, தாங்கள் இருவரும் தூரத்து உறவினர்கள் என்பது தெரிந்தால் மன்னர் மற்றும் ராஜ குடும்பத்தினர் மீதான அன்பு மேலும் அதிகரிக்கலாம் என்கிறார் ராபர்ட்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |