ராணி கமிலா குறித்து இளவரசர் ஹரி சொன்ன ஒரு வார்த்தை! கோபத்திலும், ஆத்திரத்திலும் மன்னர் சார்லஸ்
இளவரசர் ஹரியின் Spare புத்தகத்தில் ராணி கமிலா குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மன்னர் சார்லஸுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தானவர்
தனது நினைவு குறிப்பான Spare-ல், தனது தந்தை சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலாவை “ஆபத்தானவர்” என ஹரி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சொந்த தகுதியை அதிகப்படுத்தி கொள்ள அரச குடும்ப உறுப்பினர்கள் பற்றி கதைகளை கமிலா பல முறை விதைத்தாக தெரிவித்திருக்கிறார்.
இதோடு கமிலா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஒருவேளை அவர் மகிழ்ச்சியாக இருந்தால் அவர் ஆபத்து குறைவானவராக இருக்கலாம் என ஹரி காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
SHUTTERSTOCK
சார்லஸ் கோபம்
நினைவுக் குறிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ஹரி தனது மனைவி குறித்து தெரிவித்த கருத்துகளால் மன்னர் சார்லஸ் மிகவும் வருத்தமடைந்ததோடு, கோபமும் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் காலப்போக்கில் குடும்பத்தை நோக்கி ஹரி மென்மையான முடிவு எடுப்பார் என சார்லஸ் நம்புகிறார் எனவும் தெரியவந்துள்ளது.