சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா... ஒளிந்திருக்கும் அந்த 666: எச்சரிக்கும் வாழும் நாஸ்ட்ராடாமஸ்
வாழும் நாஸ்ட்ராடாமஸ் என கொண்டாடப்படும் பிரேசில் நாட்டவரான அதோஸ் சலோமி, சார்லஸ் மன்னர் தொடர்பில் மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முடிசூட்டு விழாவில் சாத்தானின் இலக்கம்
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் சாத்தானின் இலக்கம் என கூறப்படும் 666 ஒளிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
@getty
36 வயதான அதோஸ் சலோமி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, கொரோனா பெருந்தொற்று பரவல், ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மரணம், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் தண்ணீர் பற்றாக்குறை என முக்கியமான பல சம்பவங்களை முன்னரே அறிவித்திருந்தார்.
தற்போது, மன்னர் சார்லஸ் திடீரென்று நோய்வாய்ப்படும் ஆபத்து இருப்பதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மன்னர் சார்லஸ் விவகாரத்தில் தாம் விரிவான ஆய்வுகள் முன்னெடுத்துள்ளதாக கூறும் அதோஸ் சலோமி, மே மாதம் 6ம் திகதியை முடிசூட்டு விழாவிற்கு என மன்னர் சார்லஸ் தெரிவு செய்ததன் பின்னணி குறித்து அதிரவைக்கும் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
@PA
உண்மையில் ஜூன் மாதத்தில் முடிசூட்டு விழா முன்னெடுக்கப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும் என்றார். மேலும், முடிசூட்டு விழா முன்னெடுக்கப்பட்ட மே 6ம் திகதி மன்னரின் பேரப்பிள்ளை ஆர்ச்சியின் பிறந்தநாளும் கூட, அதாவது முன்வினைப் பயன் என்பது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளது என வாழும் நாஸ்ட்ராடாமஸ் அதோஸ் சலோமி குறிப்பிட்டுள்ளார்.
ஹரி வாழ்க்கையில் பூகம்பம் வெடிக்கும்
அத்துடன் இரண்டாம் எலிசபெத் ராணியாரின் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் 6 மாதங்கள், 6 வாரங்கள் மற்றும் 6 நாட்கள் கழித்து சார்லஸ் மன்னர் முடிசூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Image: Felipe Assis
இந்த 666 என்ற இலக்கம் மன்னர் சார்லஸ் வாழ்க்கையில் புகுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் அதோஸ் சலோமி எழுப்பியுள்ளார்.
முன்னர், இளவரசர் ஹரி தொடர்பிலும் தமது கருத்தை அதோஸ் சலோமி வெளிப்படுத்தியிருந்தார்.
அதாவது ஜூன் மாதத்தில் ஹரி மற்றும் மேகன் வாழ்க்கையில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.