மன்னிப்புக் கேட்ட மன்னர் சார்லஸ்: நெகிழ்ந்த ரசிகையின் பதில்
மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள நிலையில், சிறிய அளவில் எதிர்ப்புகள் காணப்பட்டாலும், எதிர்பாராத அளவில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு அவரை சந்தித்துவருகிறார்கள்.
மன்னிப்புக் கேட்ட மன்னர் சார்லஸ்
Image: Getty Images
அவுஸ்திரேலிய பயணத்தின் ஒரு பகுதியாக, மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் சிட்னியிலுள்ள ஓபரா மாளிகைக்கு சென்றிருந்தார்கள்.
அந்த இடத்துக்கு அருகில் மன்னரைக் காண மக்கள் திரண்டிருந்தார்கள். சுமார் 3,000 பேர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10,000க்கும் அதிகமானோர் அங்கு திரண்டிருந்தார்கள்.
ஆனால், மன்னர் பல மணி நேரம் தாமதமாகவே அங்கு வர முடிந்துள்ளது.
Image: Getty Images
தான் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் மன்னர். அதைக் கேட்டு நெகிழ்ந்துபோன மன்னரின் ரசிகை ஒருவர், உங்களைப் பார்க்க எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் தகும் என்று கூறியுள்ளார்.
மன்னருக்கு பல நினைவுப்பரிசுகளை மக்கள் அள்ளி வழங்க, ஒரு கூட்டமோ, மன்னர் நீண்ட காலம் வாழ்க என்னும் பாடலை உரத்த குரலில் பாட, மன்னரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மன்னர் சார்லசின் இந்த அவுஸ்திரேலிய பயணம் பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
Image: AFP via Getty Images
புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மன்னர் சார்லஸ் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதுடன், அவர் மன்னராக பொறுப்பேற்றபின் அவுஸ்திரேலியாவுக்கு அவர் முதன்முறையாக மேற்கொள்ளும் பயணமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |