பிரபல பிரெஞ்சு உணவுக்கு மறுப்பு தெரிவித்த மன்னர் சார்லஸ்: அதும் மகாராணியாரின் விருப்ப உணவாம்!
பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் பிரான்சுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் அரசு அளிக்கும் விருந்தில், ஒரு குறிப்பிட்ட உணவுக்கு தடை விதித்துள்ளாராம் மன்னர் சார்லஸ்.
பிரான்சின் பிரபல உணவு
பிரான்சில் foie gras என்பது ஒரு பிரபல உணவாகும். வாத்துக்களுக்கு, குழாய் மூலம் அதிக அளவு மக்காச்சோளத்தை உணவாக கொடுத்து, (அல்லது வலுக்கட்டாயமாக திணித்து என்றும் சொல்லலாம்) வாத்துக்களின் ஈரலை சீக்கிரமாக கொழுக்கச் செய்து, அந்த ஈரலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுதான் foie gras!
மகாராணியாருக்கு பிடித்த உணவு
ஆனால், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இந்த foie gras மிகவும் பிடிக்குமாம்.
ஆனாலும், மன்னர் சார்லஸ் இந்த உணவுக்குத் தடை விதித்துள்ளதால், விருந்தில் இந்த உணவு பரிமாறப்படாது என தெரிகிறது.
இன்னொரு விடயம் என்னவென்றால், நியூயார்க் நாடாளுமன்ற உறுப்பினர்கள், foie gras உணவுக்கு தடை விதிப்பதற்கு ஆதரவாக பேராதரவுடன் வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |