இளவரசர் சார்லஸ் தன்னுடன் எப்போதும் கொண்டு செல்லும் ஒரு சிறுபெட்டி... அதில் என்ன இருக்கிறது தெரியுமா?
இளவரசர் சார்லஸ் எந்த நாட்டுக்குப் பயணித்தாலும், தன்னுடன் ஒரு பெட்டியை கூடவே கொண்டு செல்கிறார்.
அது ஆர்கானிக் உணவுகள் இருக்கும் ஒரு காலை சிற்றுண்டி பெட்டியாம்!
ராஜகுடும்ப உறுப்பினர்கள் பலர் மக்கள் பார்வைக்கு தாங்கள் மற்றவர்களைப்போல சாதாரணமாக இருப்பதைப் போலவே காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். சில அதற்காக கூடுதல் முயற்சியும் எடுக்கிறார்கள்.
ஆனால், சிலரோ, நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பது போல் நடந்துகொள்கிறார்கள், அதை மறைக்கவும் அவர்கள் முயற்சிப்பதில்லை.
மன்னர் சார்லசைப் பொருத்தவரை, அவர் தனக்குப் பிடித்தவை என கருதும் சில விடயங்களை எக்காலத்திலும் மாற்றுவதில்லையாம். உதாரணமாக, அவரது ஷூ லேஸ் கூட அயர்ன் செய்யப்பட்டிருக்கவேண்டுமாம். அத்துடன், தான் பயணிக்கும்போது தனக்கான டாய்லட் பேப்பர் போன்ற சில விடயங்களை அவர் எப்போதுமே தன்னுடன் கொண்டு செல்வதுண்டாம்.
Image: PA Media
அவ்வகையில், உலகின் எந்த பகுதிக்குப் பயணித்தாலும் தன்னுடன் ஒரு காலை சிற்றுண்டி பெட்டியைக் கொண்டு செல்கிறார் சார்லஸ். அதில் அவரே தேர்வு செய்த ஆர்கானிக் வகை சிற்றுண்டி இருக்குமாம்.
அந்த பெட்டியில் ஆறு வகை தேன் போத்தல்கள், சிலவகை கார்ன் பிளேக்ஸ் போன்ற உணவுகள், உலர் பழங்கள் முதலானவை இருக்கும் என்கிறார் Graham Newbould என்னும் செஃப்.
Image: Getty Images/iStockphoto