180 வருட பாரம்பரியத்தை உடைக்கும் மன்னர் சார்லஸ்
பக்கிங்காம் அரண்மனை என்பது, 1837ஆம் ஆண்டு முதல், பிரித்தானியாவை ஆள்பவர்கள் வாழும் மாளிகை.
விக்டோரியா மகாராணி முதல், இரண்டாம் எலிசபெத் மகாராணியார் வரை அங்குதான் வாழ்ந்தார்கள்.

பாரம்பரியத்தை உடைக்கும் மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லசைப் பொருத்தவரை, அவர் பிரித்தானிய மன்னரானதிலிருந்தே கிளாரன்ஸ் இல்லம் என்னும் மாளிகையில்தான் வாழ்ந்துவருகிறார்.

இதற்கிடையில், பக்கிங்காம் அரண்மனை 369 மில்லியன் பவுண்டுகள் செலவில் புதுப்பிக்கப்பட்டுவருகிறது. 2017இல் துவங்கிய புதுப்பித்தல் பணி, 2027இல் முடிவடைய உள்ளது.
பக்கிங்காம் அரண்மனையில் புதுப்பித்தல் பணி நடைபெற்றுவருவதால் மன்னர் சார்லஸ் அங்கு வாழவில்லை, புதுப்பித்தல் பணி முடிந்ததும் அவர் அங்கு திரும்பிவிடுவார் என கருதப்பட்டது.

ஆனால், பக்கிங்காம் அரண்மனை புதுப்பித்தல் பணி முடிந்தாலும், மன்னர் அங்கு வாழப்போவதில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிரித்தானியாவை ஆள்பவர் பக்கிங்காம் அரண்மனையில்தான் வாழ்வார் என்னும் 180 வருட பாரம்பரியத்தை உடைக்க இருக்கிறார் மன்னர் சார்லஸ்.
ஆக, அதிகாரப்பூர்வமாக பிரித்தானிய ராஜ குடும்ப தலைமையகமாக திகழ்ந்தாலும், அதிகாரப்பூர்வ விழாக்கள், மன்னர் பிரதமரை சந்தித்தல் ஆகிய விடயங்கள் நடக்கும் அலுவலகமாக செயல்படப்போகிறது பக்கிங்காம் அரண்மனை.

விடயம் என்னவென்றால், பக்கிங்காம் அரண்மனையை பார்வையிடுவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பிரித்தானியாவுக்கு வருகிறார்கள். தோராயமாக ஆண்டுக்கு 700,000 சுற்றுலாப்பயணிகள் பக்கிங்காம் அரண்மனைக்கு வருகை புரிகிறார்கள்.
ஆக, மேலும் ஏராளமானோர் பக்கிங்காம் அரண்மனையை பார்வையிடுவதற்கு வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |