கமிலாவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் கொடுத்த பட்டத்தை மாற்றவுள்ள மன்னர் சார்லஸ்!
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் காமிலாவிற்கு வழங்கிய கன்சார்ட் பதவியை பக்கிங்ஹாம் அரண்மனை கைவிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மனைவியான கமிலாவை ராணி என்ற அழைக்க நினைக்கிறார்.
குயின் கன்சோர்ட் கமிலா 'ராணி கமிலா' ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பக்கிங்ஹாம் அரண்மனை ராணி கமிலாவின் பட்டத்திலிருந்து 'கன்சார்ட்' ஐ அமைதியாக கைவிடும் என்றும், மே 2023-ல் சார்லஸும் கமிலாவும் முடிசூட்டப்படும் வரை இந்த மாற்றம் படிப்படியாக நடக்கும் என்று கூறப்படுகிறது.
இளவரசராக இருந்த சார்லஸ் மன்னராகும் கமிலா ராணி கன்சார்ட் என்ற பட்டத்தை பெறுவார் என்று ராணி இரண்டாம் எலிசபெத் பிப்ரவரியில் அறிவித்தார்.
அவர் அப்போது கூறுகையில், "என் மகன் சார்லஸ் மன்னராவான், நீங்கள் எனக்கு அளித்த அதே ஆதரவை அவனுக்கும் அவன் மனைவி கமிலாவுக்கும் கொடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்; அந்த நேரம் வரும்போது, கமிலா தனது சொந்த விசுவாசமான சேவையைத் தொடர்வதால், ராணி மனைவி (Queen Consort) என்று அழைக்கப்பட வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்." என்று பிரித்தானிய மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால், ராணியின் விருப்பத்திற்கு மாறாக காமிலாவை வெறுமென ராணி என்று மற்ற மன்னர் சார்லஸ் முயற்சித்துவருகிறார். அவர் தனது மனைவிக்கு முழுமையாக 'ராணி' என்று பட்டமளிக்க அனைத்து உரிமைகளும் அதிகாரமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.