ஹமாஸ் போராளிக்குழுவை கண்டித்த பிரித்தானிய மன்னர் சார்லஸ்
இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை பிரித்தானிய மன்னர் சார்லஸ் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் மீது கண்டனம்
இஸ்ரேல் - ஹமாஸ் போராளிக்குழு மோதலில் அரச குடும்பம் ஹமாஸை கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதலில் அடுத்தடுத்து வெளிவரும் பொதுமக்கள் படுகொலைகளால் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இஸ்ரேல் மீது ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் பயங்கரமானவை என கூறப்பட்டுள்ளது.
Getty
நேற்று மன்னர் சார்லஸ் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் மற்றும் ஜோர்டானின் மன்னர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாகவும், அப்போது மத்திய கிழக்கின் நிலைமை குறித்து தனது ஆழ்ந்த கவலையையும், துன்பத்தில் இருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகவும் கூறியதாக தெரிய வந்துள்ளது.
Hannah McKay/PA
வில்லியம் - கேட் கருத்து
இளவரசர் வில்லியம் மற்றும் கேட்-டும் மன்னருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
'கடந்த நாட்களில் வெளிப்பட்ட பேரழிவு நிகழ்வுகளால் வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகள் பயங்கரமானவை; அவர்கள் வில்லியமும், கேட்'டும் கண்டிக்கிறாரகள்' என தெரிவித்துள்ளார்.
PA Media
இதற்கிடையில் பிரித்தானிய அரசாங்கம் ஹமாஸ் போராளிக்குழுவை ஒரு பயங்கரவாத குழுவாகவே பார்க்கிறது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |