மன்னர் முடிசூட்டு விழாவில் இளவரசர் வில்லியமின் பங்கு: “ஆபரேஷன் கோல்டன் ஆர்ப்” என்பது என்ன?
மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா மே 6ம் திகதி 2023 ஆம் ஆண்டு நடைபெறும்.
முடிசூட்டு விழாவிற்கான திட்டங்கள் ஆபரேஷன் கோல்டன் ஆர்ப் என்ற குறியீட்டில் அறியப்படுகிறது.
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் வேல்ஸ் இளவரசராக புதிதாக அறிவிக்கப்பட்ட இளவரசர் வில்லியமின் மிக முக்கிய பங்குகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மே 6ம் திகதி 2023 ஆம் ஆண்டு சனிக்கிழமை நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
கேன்டர்பரி பேராயர் நடத்தும் ஆராதனையுடன் மே 6ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூட்டு விழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
GETTY
மறைந்த ராணியின் இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்த நார்போக் டியூக், மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவையும் நடத்தும் பாத்திரத்தையும் பெற்றுள்ளார்.
மன்னர் சார்லஸ் உடன் அவரது மனைவி ராணி கன்சார்ட் கமிலாவும் முடிசூட்டப்படுவார் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நீண்ட கால மரபுகள் மற்றும் ஆடம்பரத்தில் வேரூன்றியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PA
இந்நிலையில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் மூத்த மகன் மற்றும் புதிய வேல்ஸ் இளவரசராக அங்கீகரிக்கப்பட்ட இளவரசர் வில்லியமின் பங்கு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
வேல்ஸ் இளவரசர் வில்லியம் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கான சேவை மற்றும் திட்டமிடுதலுக்கான “ஆபரேஷன் கோல்டன் ஆர்ப்” என்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிசூட்டு விழாவிற்கான திட்டங்களை “ஆபரேஷன் கோல்டன் ஆர்ப்” என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்படுகிறது. இதில் நிகழ்ச்சியின் போக்கு, விருந்தினர் உபசரிப்பு மற்றும் முடிசூட்டு விழாவில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை திட்டமிடல் போன்றவை இடம்பெறும்.
GETTY
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய எல்லையில் அமெரிக்கா, ஜப்பான் திடீர் ராணுவ கூட்டு பயிற்சி: எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை
இதற்கிடையே புதிதாக வேல்ஸ் இளவரசராக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இளவரசர் வில்லியமிற்கு, அவரது தந்தை 1969 ஆண்டு வேல்ஸ் இளவரசராக அறிவிக்கப்பட்ட போது நடத்தப்பட்ட விழாக்கள் போன்ற நிகழ்வுகள் தற்போது நடத்தப்படாது என்று கருதப்படுகிறது.