சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நாளில் பொது விடுமுறை இருக்குமா? உறுதி செய்யப்பட்ட தகவல்
மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டு 8 மாதங்களுக்கு பிற்கு முடிசூட்டு விழா
குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் ஒன்று கூடி கொண்டாட ஒரு வாய்ப்பாக இருக்கும்
பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூடும் விழா நாளில் பொதுவிடுமுறை அளிக்கப்படுமா என்பது தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவானது லண்டனில் 2023 மே மாதம் 6 ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. ராணியார் மறைவுக்கு பின்னர் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டு 8 மாதங்களுக்கு பிற்கு முடிசூட்டு விழா முன்னெடுக்கப்படுகிறது.
@getty
இதனையடுத்து, திங்கட்கிழமை மே மாதம் 8ம் திகதி பிரித்தானியா முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், இந்த விடுமுறை நாளில் நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் ஒன்று கூடி கொண்டாட ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றார்.
மேலும், மன்னர் ஒருவர் புதிதாக முடிசூடுவது நம் நாட்டிற்கு ஒரு தனித்துவமான தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு, அடுத்த ஆண்டு முழு பிரித்தானியாவுக்கும் கூடுதலாக ஒரு விடுமுறையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
மேலும், மூன்றாம் சார்லஸ் மன்னரின் நினைவாக நாடு முழுவதும் உள்ளூர் மற்றும் தேசிய நிகழ்வுகளில் பங்கேற்று அவரைக் கொண்டாடவும் அவருக்கு அஞ்சலி செலுத்தவும் மக்கள் ஒன்றிணைவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.