மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா திகதி வெளியானது: பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி
ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 மாதங்களுக்கு பிறகு இந்த விழா
எலிசபெத் ராணியாரின் தாயாருக்கு முடிசூட்டப்பட்டது போன்று கமிலாவுக்கும் கிரீடம் சூட்டப்படும்.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா 2023ல் முன்னெடுக்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் மே 6ம் திகதி சனிக்கிழமை மூன்றாம் சார்லஸ் மன்னருக்கான முடிசூட்டுவிழா முன்னெடுக்கப்படும். இந்த விழாவில் ராணியாராக கமிலாவும் முடிசூட உள்ளார்.
@getty
ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 மாதங்களுக்கு பிறகு இந்த விழா முன்னெடுக்கப்பட உள்ளது. முடிசூட்டு விழாவானது பாரம்பரிய முறைப்படி முன்னெடுக்கப்படும் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை சுட்டிக்காட்டியுள்ளது.
மன்னர் சார்லஸ் புனித எண்ணெயால் அபிஷேகம் செய்யப்பட்டு, புனித எட்வர்டின் கிரீடம் அவருக்கு சூட்டப்படும். 1937ல் எலிசபெத் ராணியாரின் தாயாருக்கு முடிசூட்டப்பட்டது போன்று மே 6ம் திகதி கமிலாவுக்கும் புனித எண்ணெயால் அபிஷேகம் செய்யப்பட்டு, கிரீடம் சூட்டப்படும்.
@getty
இந்த விழா அனைத்தும் கேன்டர்பரி பேராயர் தலைமையில் முன்னெடுக்கப்படும். ஆனால் ராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டும் போது முன்னெடுக்கப்பட்ட ஆடம்பரம் ஏதும் தற்போது இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
சுமார் 60 நிமிடங்களில் விழா முடிவுக்கு வரும் எனவும், சிறப்பு விருந்தினர்களின் எண்ணிக்கை 6,000 மட்டுமே எனவும், விழாவில் பங்கேற்பாளர்கள் 2,000 மட்டுமே எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty