மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா திகதி வெளியீடு: பிரித்தானிய வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜுன் மாதத்தில் நடைபெறும்.
மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு பிரித்தானிய வங்கிகளுக்கு விடுமுறை எனவும் தகவல்.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும், அன்று நாட்டின் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் insiders தகவல் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவை மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தின் பால்மோரலில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Getty Images
ராணிக்கான பொது மற்றும் அரச துக்கம் இரண்டும் கடந்த வாரங்களில் நிறைவடைந்து இருப்பினும், மன்னர் மூன்றாம் சார்லஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் 3ம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே மாளிகையில் வைத்து நடைபெறும் என insiders தகவல் தெரிவித்துள்ளது.
Getty Images
மேலும் அன்று பிரித்தானிய வங்கிகளுக்கு பொது விடுமுறையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெயரிடப்படாத அதிகாரி, மன்னர் முன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு நடக்கும் என்றும், பெரும்பாலும் ஜூன் 3ம் திகதியாக அது இருக்கலாம் என்றும் தெரிவித்தாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஏனென்றால், அடுத்த ஆண்டு இந்த திகதியில் (ஜூன் 3) மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற்றால், மன்னரின் மறைந்த தாயார் முடிசூட்டப்பட்டு கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் முழுமையாக நிறைவடையும்.
இதற்கிடையில் மன்னரின் முடிசூட்டு விழா குறித்து வெளிவரும் செய்திகள் மற்றும் திகதி அறிவிப்புகள் "முற்றிலும் ஊகம்" என்று பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர், லீசெஸ்டர்ஷைர் தெரிவித்துள்ளார்.
Mirrorpix
கூடுதல் செய்திகளுக்கு: அயர்லாந்து சேவை மையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்து: பலியானோர் எண்ணிக்கை வெளியீடு
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் மன்னர் சார்லஸ் தனது 74வது வயதை அடைவார், அதுமட்டுமின்றி பிரித்தானியாவின் மிக அதிக வயதில் முடிசூட்டப்பட்ட மன்னர் என்ற பெயரையும் மூன்றாம் சார்லஸ் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Getty Images