பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா: அதிகாரப்பூர்வ புகைப்படங்களின் தொகுப்பு இதோ
மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசமுறைப்படி முடிசூடிக்கொண்ட நாளில், தனது அரச குடும்பத்தினருடன் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படங்களை 2005-ல் சார்லஸ் மற்றும் கமிலாவின் திருமண படங்களையும் எடுத்த ஹக் பர்னார்ட் (Hugo Burnand) எடுத்துள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களின் தொகுப்பு இதோ:
1- வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், பக்கிங்ஹாம் அரண்மனையின் சிம்மாசன அறையில், எஸ்டேட் அங்கியையும், ஏகாதிபத்திய அரச கிரீடத்தையும் அணிந்து, இறையாண்மையின் உருண்டை மற்றும் இறையாண்மையின் செங்கோலை சிலுவையுடன் மன்னர் சார்லஸ் எடுத்துக்கொண்ட அதிகாரபூர்வ உருவப்படம்.
HHugo Burnand/Royal Household 2023/PA Wire
2- மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது ராணி காமிலாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
Hugo Burnand/Royal Household 2023/PA Wire
3- பிரித்தானிய ராணி காமிலாவின் அதிகாரப்பூர்வ உருவப்படம்.
Hugo Burnand/Royal Household 2023/PA Wire
4- வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மகன் இளவரசர் ஜார்ஜ் ஆகியோருடன் மன்னர் மூன்றாம் சார்லஸ் எடுத்துக்கொண்ட படம். மன்னர் முடிசூட்டப்பட்ட நாளில் பக்கிங்ஹாம் அரண்மனையின் சிம்மாசன அறையில் எடுக்கப்பட்டது.
Hugo Burnand/Royal Household 2023/PA Wire
5 -மன்னன் சார்லஸ் மற்றும் ராணி கமிலா பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள சிம்மாசன அறையில் முடிசூட்டப்பட்ட நாளில் கலந்துகொண்ட அவர்களின் Pages of Honour and Ladies-உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். இதில் இளவரசர் ஜார்ஜ் மற்றும் ராணியின் பேரன்கள் ஃப்ரெடி பார்க்கர் பவுல்ஸ், கஸ் லோப்ஸ் மற்றும் லூயிஸ் லோப்ஸ் மற்றும் மருமகன் ஆர்தர் எலியட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Hugo Burnand/Royal Household 2023/PA Wire
ராணி கமிலாவுக்கு அடுத்தபடியாக அவரது சகோதரி அன்னாபெல் எலியட் நிற்கிறார், மன்னருக்கு அடுத்தபடியாக 2022-ல் ராணியின் துணையாக ராயல் குடும்பத்திற்கு நியமிக்கப்பட்ட மார்ச்சியோனஸ் ஆஃப் லேண்ட்ஸ்டவுன் இருக்கிறார். மீதமுள்ள மூன்று Pages of Honour-கள், Ralph Tollemache, Lord Oliver Cholmondeley மற்றும் Nicholas Barclay ஆகியோர் புகைப்படத்தின் இடதுபுறத்தில் நிற்கின்றனர்.
6-முடிசூட்டு விழாவில் அரச குடும்பத்துடன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா எடுத்துக்கொண்ட புகைப்படம்.
Hugo Burnand/Royal Household 2023/PA Wire