சார்லஸ் மன்னரின் அந்த முடிவு... ராஜகுடும்பத்தின் மிகப்பெரிய தவறாக மாற வாய்ப்பு
இதுபோன்ற தருணத்தில் தான் பிரித்தானியாவின் மதிப்பு மற்றும் மரியாதையை உலகிற்கு நாம் வெளிச்சமிட்டு காட்ட முடியும்.
இதுபோன்ற வாய்ப்பு எப்போதேனும் வாய்க்கும், நாம் அதை கொண்டாடாமல் விடுவது முறையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மன்னர் சார்லஸ் தமது முடிசூட்டு விழாவை மிக எளிமையாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளது ராஜகுடும்பத்தின் மிகப்பெரிய தவறாக மாறலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுபோன்ற தருணத்தில் தான் பிரித்தானியாவின் மதிப்பு மற்றும் மரியாதையை உலகிற்கு நாம் வெளிச்சமிட்டு காட்ட முடியும். நாட்டின் புதிய மன்னராக முடிசூட்டவிருக்கும் மூன்றாம் சார்லஸ் தமது முடிசூட்டு விழாவை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
@getty
மேலும், 8,000 சிறப்பு விருந்தினர்களுக்கு பதிலாக 2,000 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி ஆடம்பர அம்சங்கள் ஏதுமின்றி, புதுமையான முறையில் முடிசூட்டு விழா முன்னெடுக்கப்படும் எனவும், மக்கள் பணவீக்கத்தால் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில் வீண் ஆடம்பரம் தேவையில்லை என மன்னர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், வர்ணனையாளர்கள் பலர் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா நான்கு மணி நேரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 1953ல் ராணியார் எலிசபெத்திற்கு நடந்தது போன்று மிக ஆடம்பரமாக விழா இருக்க வேண்டும் என்கிறார்கள்.
@AFP
மட்டுமின்றி, வரலாற்று ஆசிரியர்கள் சிலர், இதுபோன்ற வாய்ப்பு எப்போதேனும் மட்டுமே வாய்க்கும், நாம் அதை கொண்டாடாமல் விடுவது முறையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போதைய உலக நாடுகளுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் பெருமையை பறைசாற்றவேண்டிய தருணம் இது. இதில் விலைவாசி உயர்வை திணித்தால் கண்டிப்பாக பின்விளைவுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.
மேலும், விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார விவகாரம் தொடர்பில் மன்னர் கவலைப்பட தேவையில்லை எனவும், மன்னரின் முடிசூட்டு விழாவை ஆடம்பரமாக முன்னெடுப்பது மக்களின் கடமை எனவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
@getty