முடிசூட்டு விழாவிற்கு ஹரி வருவாரா என்பது தெரியாததால் மன்னர் எடுத்துள்ள அதிரடி முடிவு
மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழா நெருங்கிவரும் நிலையில், இளவரசர் ஹரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், இன்னமும் அவர் விழாவில் பங்கேற்பது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆகவே, ராஜ குடும்ப மரபு ஒன்றையே முற்றிலுமாக ஒழித்துவிட்டார் மன்னர்.
மன்னருக்கு மரியாதை செலுத்தும் மரபு
மன்னர் முடிசூட்டப்படும் நிலையில், ராஜ குடும்ப கோமகன்கள் மன்னர் முன் மண்டியிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவது, பிரித்தானிய ராஜ குடும்ப மரபு. அதன்படி, இளவரசர்கள் ஹரி, இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் முதலானோர் மன்னருக்கு அந்த மரியாதையை செலுத்தவேண்டும்.
Image: Mike Coppola/Getty Images for 2022 Robert F. Kennedy Human Rights Ripple of Hope Gala
ஹரியால் ஏற்பட்டுள்ள பிரச்சினை
ஆனால், இளவரசர் ஹரி தான் மன்னருடய முடிசூட்டு விழாவுக்கு வருவது குறித்த எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆகவே, மன்னர் அதிரடியாக கோமகன்கள் மரியாதை செலுத்தும் நிகழ்வையே ரத்து செய்துவிட்டார்.
இளவரசர் வில்லியமுக்கு கிடைத்துள்ள கௌரவம்
இளவரசர் ஹரி சரியான நேரத்தில் முடிவெடுக்காததால், இளவரசர் வில்லியமுக்கு ஒரு கௌரவம் கிடைக்க உள்ளது. அதாவது, மன்னரின் முடிசூட்டு விழாவின்போது, இளவரசர் வில்லியம் மட்டுமே மன்னர் முன் மண்டியிட்டு அவருக்கு மரியாதை செலுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Keith Mayhew/SOPA Images/LightRocket via Getty Images